‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 13, 2019 12:17 PM

சென்னையில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Chennai Husband Sets Wife On Fire After Fight Arrested

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் தம்பதி ராஜன் - பஞ்சவர்ணம். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜன் மனைவியின்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் வலி தாங்க முடியாமல் பஞ்சவர்ணம் அலறித் துடிக்க, சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின் அவர்கள் உடனடியாக பஞ்சவர்ணத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் 45% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மாஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில், தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிய கணவர் சிகரெட்டால் தீவைத்துக் கொளுத்தியதாகக் கூறியுள்ளார். அதனடிப்படையில் ராஜன் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Tags : #CHENNAI #HUSBAND #WIFE #FIRE #MURDER #FAMILY #FIGHT