'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 14, 2019 01:34 PM

மனைவி புகார் கொடுக்க வந்ததால் காவல் நிலையம் முன்பு கணவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Cuts His Hand, Blackmails wife against filing police case on him

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரும் ஆரோக்கியராஜ் என்ற வாலிபரும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆரோக்கியராஜ் அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி  ஐஸ்வர்யாவை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.  ஐஸ்வர்யா எவ்வளவோ சொல்லியும் கேட்காத நிலையில், அவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே நடந்த சம்பவங்கள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஐஸ்வர்யா வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கணவர் ஆரோக்கியராஜ், ‘என் மீதே புகார் கொடுக்க பாக்குறீயா? அப்படி செய்தால் நான் செத்து விடுவேன்’ எனக்கூறி திடீரென பிளேடால் கையில் நான்கு இடங்களில் அறுத்துக் கொண்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத காவலர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக அவரிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்ததோடு, அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLICE #CHENNAI #BLACKMAILS #WIFE #POLICE STATION