‘கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு’... ‘பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய்’... ‘இளம் தம்பதி செய்த அதிர்ச்சி காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 09, 2019 11:10 PM

கோயிலுக்கு கூட்டிப்போறேன்னு, பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்துப்போய், கணவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம், அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

husband\'s 2nd wedding, wife kidnapped girl lives near home

திட்டக்குடி அருகே வையங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக்குமார் (35) - செல்லக்கிளி தம்பதியினர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தும், ஆண் வாரிசு இல்லாததால் தவித்து வந்துள்ளனர். இதனால், கணவனுக்கு 2-வது திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்து, சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் தம்பதிகள் இருவரும். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் அதேப் பகுதியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு, வறுமை காரணமாக, அசோக்குமாரின் மில்லில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி, இவர்களோடு சகஜமாகப் பழகி வந்துள்ளார்.

இதையடுத்து, அந்த சிறுமியை கணவனுக்கு திருமணம் செய்ய செல்லக்கிளி, நினைத்த அதேவேளையில், கணவர் அசோக்குமாரும், சிறுமியிடம் நெருங்கிப் பழகி வந்ததுடன், உன்னை 2-வது திருமணம் செய்துகொள்ள, தன் மனைவி சம்மதம் சொன்னதாக கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துகொண்டால், வசதியாக வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதன்பின்னர், கடந்த வியாழக்கிழமை, சிறுமியின் தந்தையிடம் சென்று, கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை ஓகலூர் கிராமத்துக்கு தம்பதியர் கூட்டிச் சென்றுள்ளனர்.

அங்குள்ள கோவில் ஒன்றில்,சிறுமிக்கும், தனது கணவருக்கும் திருமணம் செய்துவைத்த செல்லக்கிளி, கோனூர் கிராமத்தில் தனக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டில் இருவரையும் தங்கவைத்துள்ளார். அங்கு சிறுமியை, அசோக்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் 2 நாட்களாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியான சிறுமியின் தந்தை, செல்லக்கிளியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர் சரியாக பதிலளிக்காததால், சிறுமியின் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கோனூரில் 3 பேரும் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட காரணங்களுக்காக, கணவன்- மனைவி 2 பேர் மீதும், போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையிலடைத்தனர். இந்த சம்பவத்தால், அந்த தம்பதியின் 3 பெண் குழந்தைகளும், யாருமின்றி தவித்து வருகின்றனர்.

Tags : #ABDUCT #KIDNAP #HUSBAND #WIFE