‘தள்ளிப்போன திருமணம்’... ‘அப்பா இல்லாம கல்யாணம் வேணாம்’... ‘இளம்ஜோடிகள் எடுத்த முடிவு’...!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Nov 15, 2019 09:02 PM
தந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, மருத்துவமனையிலேயே இளம்ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா. காதலர்களான இவர்களுக்கு, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தநிலையில், மைக்கேல் ராணுவத்தில் பணியாற்றியதாலும், தொடர்ந்து குடும்பத்தில் பலர் இறப்பினாலும், திருமணம் தள்ளிக்கொண்டே போயுள்ளது. இந்நிலையில், மீண்டும் திருமண நாள் குறித்தனர். மிகவும் ஆசையாக திருமண நாளை எதிர்நோக்கி இருந்தனர்.
ஆனால், திருமணத்திற்கு, 2 நாட்கள் முன்னர், மணமகன் மைக்கேலின் தந்தை, உடல்நிலை பாதிக்கப்பட்டு, டயாபட்டீஸ் சம்பந்தமான அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளவேண்டி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை தனது வருங்கால மனைவியிடம், மிகவும் வருத்தத்துடன் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதையடுத்து மணமகள் ஆலியா, அறுவை சிகிச்சை முடிந்தாலும், உடல்நிலை தேறியப் பின்னரே, மருத்துவமனை அவரை வெளியே அனுப்பும்.
இதனால், இந்த முறை திருமணத்தை தள்ளிப்போடாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று மைக்கேலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்ஜோடிகள் இருவரும் சேர்ந்து, தந்தை இல்லாமல் திருமணத்தை நடத்துவதைவிட, அவர் முன்பு மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். இதற்காக தேவாலயத்தில், சம்மதம் வாங்கியப் பின்னர், தந்தை முன்னிலையில், மருத்துவமனையின் நீலவண்ண கவுனில், இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
மிகவும் எளிமையாக நடைப்பெற்றாலும், இனிப்பு இல்லாத திருமண கேக் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து மருத்துவமனை ஊழியர்கள், இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். பின்னர் தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி இந்த ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். மைக்கேலின் தந்தை மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தநிலையில், தற்போது ஆலியாவின் தந்தை உடல்நலத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை மருத்துவமனை நிர்வாகம் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளது.