‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 14, 2019 06:25 PM

விவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Chennai Man Arrested For Posting Wifes Morphed Photos On Facebook

சென்னையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவருக்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சனா என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் நீதிமன்றத்தை அணுகி கடந்த ஜூலை மாதம் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது காஞ்சனா பெயரில் போலிக்கணக்கு தொடங்கிய யோகேஸ்வரன், அவருடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அதை செல்ஃபோன் எண்ணுடன் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் காஞ்சனாவின் செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் காஞ்சனா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருடைய உறவினர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் யோகேஸ்வனைக் கைது செய்துள்ளனர்.

Tags : #FACEBOOK #CHENNAI #HUSBAND #WIFE #PHOTO