‘எவ்வளவோ கூப்பிட்டும் வராத மனைவி’... ‘நண்பர்களுடன் சேர்ந்து’... ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘விசாரணையில் வெளியான தகவல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 17, 2019 10:55 PM

சேலம் அருகே குடும்பம் நடத்த பலமுறை அழைத்தும், திரும்பி வராத மனைவியை, நண்பர்களுடன் சேர்ந்து, கணவனே  கொடூரமாக கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

husband killed his wife with help of his friends in salem

சேலம் அருகே வீராணம் மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (26). கட்டிட தொழிலாளி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, மோகனேஸ்வரி (21) என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர், கோவையில் வசித்து வந்த இவர்களுக்கு சிபு (3) என்ற மகன் உள்ளான். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கணவரிடம் கோபித்து கொண்டு, தனது மகனுடன் மோகனேஸ்வரி, சேலம் அருகே மன்னார்பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், அங்கு இருந்துகொண்டு, துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10-ந் தேதி, அல்லிக்குட்டையில் முட்புதருக்குள் மோகனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இக்கொலையில் மோகனேஸ்வரியின் கணவர் கோபி ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த கோபியிடம் நடத்திய விசாரணையில், தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு, பலமுறை அழைத்தும், கோபியுடன் செல்ல, மோகனேஸ்வரி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் கோபி, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, தனது 4 நண்பர்களை நாடியுள்ளார். அவர்களின் உதவியுடன், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோபியின் நண்பர்களையும் கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : #MURDERED #HUSBAND #WIFE #KILLED #SALEM