‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Nov 11, 2019 04:52 PM
சேலத்தில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகிலுள்ள அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான கோபி குடித்துவிட்டு வந்து அடிக்கடி மோகனேஸ்வரியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக கோபியைப் பிரிந்து மோகனேஸ்வரி தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அங்கு அருகிலுள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்துவந்த மோகனேஸ்வரி நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த கோபி அவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கோபி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனேஸ்வரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மோகனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள கோபியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.