‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 09, 2019 05:34 PM

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thoothukudi Woman Lover Arrested For Husbands Brutal Murder

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேந்தவர் ராஜபாண்டி (51). இவருக்கு 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர். கார் புரோக்கரான இவர்மீது பல வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் சித்ரா (20) என்ற ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் ராஜபாண்டியின் நண்பர்களான ராமர், சக்திவேல் ஆகியோர் இவர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றுள்ளனர். அப்போது சித்ராவுக்கும், ராமருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ராஜபாண்டி சித்ராவைக் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜபாண்டி சித்ராவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நடந்த தகராறில் சித்ரா, ராமர், சக்திவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜபாண்டியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ராஜபாண்டியின் தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல் குவாரியிலும் வீசியுள்ளனர்.

இதையடுத்து ராஜபாண்டியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் நடத்திய விசாரணையில் நடந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. இதையடுத்து சித்ரா மற்றும் ராமரைக் கைது செய்துள்ள போலீஸார் மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு நபரான சக்திவேலைத் தேடி வருகின்றனர்.

Tags : #THOOTHUKUDI #WOMAN #HUSBAND #WIFE #LOVER #AFFAIR #BOYFRIEND #MURDER