‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 12, 2019 11:12 AM

ஆந்திராவில் தந்தை ஒருவர் தனது 8 மாத குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Andhra Husband Brutally Murdered 8 Months Old Baby And Wife

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னப்புள்ளையா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரைக் கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அதற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பின் ரமாதேவி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட சின்னப்புள்ளையாவுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. சிறை சென்று வந்தும் திருந்தாத அவர் இரண்டாவது மனைவியான ரமாதேவி மீதும் சந்தேகப்பட்டு அவரைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரமாதேவியுடன் தகராறில் ஈடுபட்ட சின்னப்புள்ளையா ஆத்திரத்தில் அங்கிருந்த குழந்தையை சுவற்றில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதைப் பார்த்து கதறி அழுத ரமாதேவியையும் அவர் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து ரமாதேவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இறந்திருந்த குழந்தையைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றுள்ளனர். பின்னர் படுகாயமடைந்திருந்த ரமாதேவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய சின்னபுள்ளையாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #ANDHRA #HUSBAND #WIFE #BABY #MURDER #FATHER #SON