‘அவரு நல்லாதான் இருக்காரு’.. ‘போலீஸாரிடம் நாடகமாடிய மனைவி’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 08, 2019 04:46 PM

இடுக்கியில் தகாத உறவால் ஆண் நண்பருடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் கணவரைக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டிப் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Idukki Wife Murders Husband With Help Of Lover Over Affair

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே உள்ள கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோஷ் (37). அதே பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்த ரிஜோஷ் அதற்கு அருகிலேயே மனைவி லிஜி (29) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் ரிஜோஷைக் காணவில்லை என அவருடைய உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸார் ரிஜோஷின் மனைவி லிஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனது கணவர் திருச்சூரிலிருந்தும், கோழிக்கோட்டிலிருந்தும் ஃபோனில் அழைத்து தொடர்பு கொண்டு தான் நலமாக உள்ளதாகக் கூறியதாக போலீஸாரிடம் லிஜி செல்ஃபோன் கால் ஹிஸ்டரியைக் காட்டியுள்ளார். ஆனால் ரிஜோஷின் உறவினர்கள் அதை ஏற்காததால் போலீஸாருக்கு லிஜி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து போலீஸார்  விசாரணையை தீவிரப்படுத்தியதும் கடந்த 4ஆம் தேதி ரிஜோஷ் வேலை செய்துவந்த ரிசார்ட்டின் உரிமையாளர் வாசிம் அப்துல் காதர் (27) என்பவரும், லிஜியும், அவருடைய 2 வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். இதனால் லிஜிக்கும், வாசிமுக்கும் தகாத உறவு இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வாசிமுக்கு சொந்தமான ரிசார்ட்டை போலீஸார் ஆய்வு செய்ததில் அங்கு சாக்கு மூட்டைக்குள் கட்டி புதைக்கப்பட்டிருந்த ரிஜோஷின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரிஜோஷ் மதுவுடன் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட ரிஜோஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள வாசிம் மற்றும் லிஜியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #KERALA #IDUKKI #HUSBAND #WIFE #BABY #MURDER #AFFAIR #LOVER #BOYFRIEND #RESORT