‘ஆசையா மோர் கொடுத்த மனைவி’.. ‘சுருண்டு விழுந்த கணவன்’ திருமணமான 9-வது நாளில் புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 18, 2019 09:12 PM

மனைவி கொடுத்த மோரை சாப்பிட்ட புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newly married woman gives poison laced buttermilk to husband

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கும் மதனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுக்கும் 9 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக லிங்கமையா மதனந்தபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது நாகமணி தனது கணவருக்கு மோர் கொடுத்துள்ளார். இதை குடித்த சில நிமிடங்களில் லிங்கமையா மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெரிவித்த லிங்கமையாவின் பெற்றோர், நாகமணியின் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடந்திருக்கலாம். அவரது பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், லிங்கமையா மயங்கி விழுந்ததற்கு உணவில் இருந்த நச்சுதன்மை காரணாமா? இல்லை திட்டமிட்ட செயலா? இதில் நாகமணியின் பங்கு உள்ளதா என விசாரணைக்கு பின்னரே தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #MARRIED #WOMAN #BUTTERMILK #HUSBAND