கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 06, 2020 08:34 PM

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதும் பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video BMW Car Gets Smashed By Train Driver Survives

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 3ஆம் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற பிஎம்டபிள்யூ கார் மீது மெட்ரோ ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கிய நிலையில், அதிருஷ்டவசமாக அதன் ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

ரயில்வே கேட்டின் ஒரு பகுதி மட்டும் தாழ்வாக இருப்பதை கவனிக்காமல் கார் இடதுபுறமாக திரும்பியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பகிர்ந்துள்ள அந்நகர போலீசார் ஓட்டுநர்களை அதிக கவனமுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #CCTV #METRO #TRAIN #VIDEO #BMW #CAR