‘காவலாளியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு செல்போன், பணம் பறிப்பு!’.. சிசிடிவியால் சிக்கிய திருடன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் வணிக வளாக காவலாளி ஒருவர் மீது மர்ம நபர் ஒருவர் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயன்றதுடன் அவருடைய செல்போன் மற்றும் பணத்தை திருடுகிற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ளது டேப்ஸ் வணிக வளாகம். பத்துக்கும் மேற்பட்ட கடைகளை கொண்டு இயங்கும் இந்த வணிக வளாகத்தின் சார்பில் காவலாளிகள் சுழற்சி முறையில் இங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தவர் காவலாளி செந்தில்குமார். இவர் அதிகாலை 2 மணி அளவில் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள லிப்ட்டுக்கு அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது கையில் பாராங்கலைத் தூக்கியபடி அங்குவந்த மர்ம நபர் செந்தில்குமாரின் மீது கல்லைப்போட்டு தாக்கும் மர்ம நபர் ஒருவர் 4 முறை தாக்குகிறார். பின்னர் செந்தில்குமாரின் சட்டைப்பையில் இருந்த பணத்தையும், அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொள்கிறார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி காண்போரை நடுங்க வைத்துள்ளது.
இதனையடுத்து சிசிடிவியை வைத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான ராஜ்குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சேலம், கரூர் பகுதிகளில் நடந்த 5 கொலைகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
