புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்த 'ஹெலிகாப்டர்'... தரையை நோக்கி பாய்ந்ததால் 'அதிர்ச்சி'... 'கண்ணிமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த கோர 'விபத்து'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 05, 2020 03:41 PM

ஃபிலிப்பைன்சில் காவல்துறையினர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹேலிகாப்டரில் பயணித்த 7 காவல்துறையினரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Seven Police officers injured after police helicopter crashes

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள போலீஸ் மைதானத்தில் இருந்து  காவல்துறை அதிகாரிகள் சிலர் இன்று காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

காவல்துறை தலைவர் ஜெனரல் ஆர்ச்சி கம்போவா, 4 அதிகாரிகள் மற்றும் 2 பைலட்டுகள் என 7 பேர் அதில் பயணித்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்த ஹெலிகாப்டர், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவருக்கு மட்டும் தலையில் காயம் பட்டதால் அவர் மயக்கமடைந்தார். சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #PHILIPPINES #HELICOPTER #ACCIDENT #POLICE OFFICERS