‘குவைத்திலிருந்து திரும்பிய கணவர்’... ‘வீட்டுக்கு வரும் முன்னரே’... ‘ஒட்டுமொத்த குடும்பத்திற்கு நடந்தேறிய பயங்கரம்’... 'கதறித் துடிக்கும் மனைவி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ஒபுலவாரி பள்ளி அருகே லாரி, கார் எதிரெதிரே மோதிய விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து பள்ளம் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், புல்லாம்பேட்டை சென்னகாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையா (42). இவர் குவைத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று அதிகாலை குவைத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் காரில் தன்னுடைய தாய் சுப்பம்மா (60) மற்றும் மகன் ஹரிச்சரண் (8) உடன் பாப்பையா தனது கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன ஓரம் பாடு கிராமம் அருகே சென்றபோது எதிர்நோக்கி வந்த டேங்கர் லாரி மீது கார் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளம் பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெளி நாட்டில் வேலைப் பார்த்து வந்தநிலையில், வீட்டுக்கு வரும் முன்னரே சடலமாக இருந்த கணவர் மற்றும் மகனைப் பார்த்து பாப்பையாவின் மனைவி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
