'கல்யாணத்திற்கு சென்றபோது'... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பேருக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 06, 2020 11:20 AM

கோவை அவிநாசி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The bus topples on the way to the wedding in Coimbatore

கோவை மதுக்கரையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, சேலம் தம்மம்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட உறவினா்கள் மினி பேருந்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அவிநாசி ஆறு வழிச்சாலை, தெக்கலூா் அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலைத் தடுப்பில் மோதி மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திடீரென பேருந்து கவிழ்ந்ததால், இனை எதிர்பாராத உறவினர்கள் அலறினர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 கல்லூரி மாணவிகள் உள்பட 3 போ் படுகாயம் அடைந்தனா். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அவிநாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அவிநாசி - கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. 

Tags : #ACCIDENT #INJURED #COIMBATORE