VIDEO: ‘சந்தையில் தனியாக நின்ற சிறுமி’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறுமி மீது சுவர் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Wall collapses in Kanyakumari one girl injured caught on CCTV Wall collapses in Kanyakumari one girl injured caught on CCTV](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/wall-collapses-in-kanyakumari-one-girl-injured-caught-on-cctv.jpeg)
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கனகமூலம் சந்தையில் சிறுமி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிறுமி சிக்கி படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இடிந்து விழுந்த சுவர் பழமையானது என்பதாலும், பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News Credits: Polimer News
![](https://www.behindwoods.com/images/spacer.gif)