‘தவறான’ வழியில் வந்த டேங்கர்... ‘பிரேக்’ பிடித்தபோது பேருந்துமீது ‘மோதிய’ ஜீப்... கோர விபத்தில் சிக்கி ‘8 பேர்’ பலி; ‘24 பேர்’ படுகாயம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் பேருந்து மீது ஆயில் டேங்கர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் தபி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஆயில் டேங்கர் ஒன்று சூரத் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது தவறான வழியில் சென்ற அந்த டேங்கர் உகை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது டேங்கர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடிக்க, அதன் பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் ஒன்றும் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் டேங்கரை ஓட்டிவந்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
