பாக்கத் தானே போறே ... இந்த 'தோனி'யோட ஆட்டத்த ... ஐ.பி.எல் போட்டிக்கு முன் வெளியான சிக்ஸர் சம்பவம் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 06, 2020 07:28 PM

வலைப் பயிற்சியில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஐந்து பங்குளை சிக்ஸருக்கு விரட்டி உள்ள வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Dhoni\'s Consecutive five sixes in net practice video

ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் சென்னை அணி வீரர்களின் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்கள் அதிகம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய பயிற்சியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐந்து பந்துகளை தொடர்ந்து சிக்ஸருக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பல மாதங்களாக தோனி ஆடாமல் இருந்து வரும் நிலையில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ள தோனியின் வீடியோவை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Courtesy : Star Sports Tamil (Twitter)

 

Tags : #MS DHONI #IPL 2020 #CHENNAI SUPER KINGS