'திடீரென' சாலையை கடந்த 'முதியவர்'... அதிர்ச்சியடைந்த 'வேன்' டிரைவர்... 'பள்ளத்தில்' பாய்ந்த பள்ளி 'வாகனம்'... 'அலறித்துடித்த' மாணவர்கள்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூரில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், குருச்சிகுளம், ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளி மாணவர்கள் வேன் மூலம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சித்துடையார் கிராமத்தை அடுத்த குழுமூர் நோக்கி வேன் சென்ற கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் வேனை சாலையோரத்தில் திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். 10ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
