VIDEO: ‘நேருக்குநேர்’ மோதிய 2 லாரிக்கு நடுவே சிக்கி ஓடிய நபர்.. நெஞ்சை உறைய வைத்த சிசிடிவி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு லாரிகள் மோதிக்கொண்டபோது இடையில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் போத்திரெட்டி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பக்கவாட்டில் வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அப்போது நபர் ஒருவர் சாலையைக் கடந்து சென்றுகொண்டு இருந்தார்.
இரண்டு லாரிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி சாய்ந்தவாறே வந்ததைக் கண்ட அந்த நபர் வேகமாக அங்கிருந்து ஓடினார். இதனால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
