'மாலையும் கழுத்துமாக கிளம்பிய காதல் ஜோடி..' 'பின்னாடி சர்ரென்று பாய்ந்த லாரி, சம்பவ இடத்திலேயே...' உள்ளத்தை உருக செய்யும் கோர விபத்து...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 27, 2020 01:57 PM

சேலம் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது லாரி மோதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The newly married couple, the husband dies in truck collision

சேலம் மாவட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யன் துரை. இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அய்யன் துறையும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த விருத்தாசலத்தை சேர்ந்த ஸ்ரீதேவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை ஸ்ரீதேவியின் வீட்டார் ஏற்க மறுத்ததால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து அய்யன்துரையும், ஸ்ரீதேவியும் புதுப்பாளையத்தில் உள்ள சித்தர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து மாலையும் கழுத்துமாக மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியே வந்த தம்பதி, அங்கிருந்து இரு சக்கரவாகனத்தில் கோவைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது சங்ககிரி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் அய்யன்துரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

காதல் கணவன் கண் எதிரே பலியானதை பார்த்த ஸ்ரீதேவி படுகாயங்களுடன் கதறி அழுத நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீதேவியை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த அய்யன்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அய்யன்துரை சங்ககிரி சாலையின் இடது புறமாக சென்று கொண்டிருந்ததாகவும், பைக்கின் பின்புறம், வேகமாக வந்துகொண்டிருந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஆயிரம் கனவுகளோடு அடியெடுத்து வைக்க நினைத்த இளஞ்ஜோடிகளின் பரிதாப நிலை அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #ACCIDENT