‘தாறுமாறாக ஓடிய ஆட்டோ’... ‘வயல்வெளியில் கவிழ்ந்து’... ‘பெண் உட்பட 4 பேருக்கு நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 27, 2020 08:19 PM

கோவை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two died in Load Auto Accident in Coimbatore, 2 Injured

கோவை காளியாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 55). சரக்கு ஆட்டோ உரிமையாளரான இவர், கடந்த செவ்வாய்கிழமை தனது ஆட்டோவில் அதேப் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (56), பழனிச்சாமி (50) மற்றும் திருமலையாம்பாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் (55) ஆகிய 3 பேரையும் ஆட்டோவில் கட்டிட வேலைக்கு க.க.சாவடிக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தார்.  மேலும் ஆட்டோவில் மணல், சிமெண்டு மூட்டைகளும் இருந்தன.

ஆட்டோ காளியாபுரம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மாரிமுத்து, பழனிச்சாமி மற்றும் பழனியம்மாள் ஆகிய 3 ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை ஆம்புலன்சில் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மாரிமுத்து, பழனிச்சாமியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பழனிச்சாமியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #COIMBATORE