‘இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்’... நண்பனின் ‘உருக்கமான’ வீடியோவால்... ‘பதறிப்போய்’ சென்ற உறவினர்களுக்கு... ‘பேரதிர்ச்சி’ கொடுத்த இளைஞர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 27, 2020 05:39 PM

புதுக்கோட்டையில் நண்பன் விபத்தில் இறந்துவிட்டதாக இளைஞர் ஒருவர் விளையாட்டாக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pudukkottai Man Posts TikTok Video Of Friend Who Is Alive As Dead

புதுக்கோட்டை மாவட்டம்  கிருஷ்ணாஜிப்பட்டினத்தைச் சேர்ந்த நண்பர்கள் ரியாஸ், பகுர்லா. இவர்கள் இருவரும் சேர்ந்து பதிவிடும் வீடியோக்கள் டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. அதனால் இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பகுர்லா இறந்துவிட்டதாக அவருடைய போட்டோவுடன் ‘கண்ணீர் அஞ்சலி, இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்’ என்று எழுதி, அசுரன் படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வய பூக்கலியே’ என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் ரியாஸ் டிக்டாக் வீடியோ ஒன்றை விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து டிக்டாக்கில் அந்த வீடியோ வேகமாக பரவ, அதைப்பார்த்த பகுர்லாவின் உறவினர்கள் பதறிப்போய் அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது பகுர்லா உயிருடன் இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த வீடியோ குறித்து விசாரித்துள்ளனர். அதன்பிறகே ரியாஸ் விளையாட்டாக வீடியோ வெளியிட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள பகுர்லா, “நான் இறந்து விட்டதாக அவர் வீடியோ பதிவிட்டதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரை கைது செய்து அவரின் ஐடியை பிளாக் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். டிக்டாக்கில் நண்பன் இறந்துவிட்டதாக இளைஞர் விளையாட்டாக வீடியோ பதிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #PUDUKKOTTAI #TIKTOK #VIDEO #FRIEND