‘சிறுவன்’ கண்முன்னே... ‘மொத்த’ குடும்பத்திற்கும் நேர்ந்த பயங்கரம்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘துயரம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் கார் விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த ஒரு சிறுவன் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கார் கட்டுப்பாட்டை மீறி கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதில் உயிரிழந்த ரகு, அவருடைய மனைவி அலிவேலு மற்றும் அவர்களுடைய மகள் கீர்த்தி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் தப்பிய அந்த தம்பதியின் மகன் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags : #ACCIDENT #TELANGANA #CAR #CANAL #FAMILY