‘திடீரென’ தீப்பிடித்து எரிந்த தனியார் ‘பேருந்து’... தூங்கிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ‘கோர’ விபத்தால் ஏற்பட்ட ‘பரிதாபம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 02, 2020 03:40 PM

தேனி அருகே தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Kerala Man Dies In Private Bus Fire Accident Near Theni

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே உள்ள செழிமடை எனும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியார் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அந்தப் பேருந்தில் திடீரென தீ பற்றியுள்ளது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியுள்ளது.

இதையடுத்து பேருந்து பற்றி எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக மண்ணை போட்டும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த க்ளீனர் ராஜன் என்பவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குமுளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் பேட்டரி மின்கசிவால் தீப்பிடித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.