தாய், மனைவி, 2 குழந்தைகளுடன்... ‘ஒரே’ பைக்கில் ‘சுப’ நிகழ்ச்சிக்காக சென்றபோது... இளைஞரின் ‘அலட்சியத்தால்’ நேர்ந்த ‘கோர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 01, 2020 07:27 PM

திருப்பத்தூர் அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tirupattur Mother Died In Accident Due To Sons Carelessness

சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது தாய், மனைவி, மகன் மற்றும் உறவினர் மகள் என 4 பேரை ஒரே இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஒரு சுப நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் வெங்களாபுரம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது அங்கு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த சுரேஷ், பயத்தில் திடீரென வாகனத்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில், டிராக்டர் ஏறி சுரேஷின் தாய் இந்திராணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்திராணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MOTHER #SON #WIFE #CHILDREN