'அசுரவேகத்தில்' பேருந்தின் மீது மோதி 'இழுத்துச்சென்ற' ரெயில்... 'பதறித்துடித்த' பயணிகள்... சம்பவ இடத்திலேயே '20 பேர்' பலி... 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பேருந்தின் மீது மோதி அதனை 200 மீட்டர் தூரம் ரெயில் இழுத்துச்சென்றது. இந்த கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நேற்றிரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா என்னும் நகரம் நோக்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. சிந்து மாகாணம் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை அந்த பேருந்து கடக்க முயன்றது.அப்போது ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் அந்த பேருந்தின் மீது மோதி சுமார் 200 மீட்டர் தூரம் அதனை இழுத்துச்சென்றது.
அப்போது பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர். சம்பவ இடத்திலேயே 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு 60-க்கும் மேற்பட்ட பயணிகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளில் ஒருசிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. .