போலி பாஸ்போர்ட்டுடன் பராகுவே நாட்டில் நுழைந்ததால்.. கைது செய்யப்பட்ட விளையாட்டு வீரர்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 05, 2020 03:41 PM

போலி பாஸ்போர்ட் விவகாரத்தினால், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ronaldinho arrested in Paraguay after allegedly he has fake passport

பிரேஸிலைச் சேர்ந்த 39 வயதான கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ. 2002 -ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் பிரேசிலின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருண்ட ரொனால்டினோதான் அந்த நேரத்தில் உலகக் கோப்பையை இவரது அணியால் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தனது சகோதரருடன் பராகுவே நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததோடு, அங்கிருந்த மைதானத்தில் தனது சகோதரருடன் விளையாண்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் ரொனால்டினோவின் பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது, அவர்களின் அடையாளங்கள் பாராகுவே நாட்டைச் சேர்ந்தவர்களாக அதில் இருந்துள்ளது.

இதனை அடுத்து போலி பாஸ்போர்ட்டுடன் பராகுவே நாட்டில் நுழைந்ததற்காக ரொனால்டினோ பராகுவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #FOOTBALL