'17 வயது சிறுவனை.. 20 முறை பலாத்காரம்'.. 'மகன் என்று சொல்லி ஏமாற்றிய 41 வயது பெண்'.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 31, 2019 07:14 PM

புளோரிடாவின் ஆர்லாண்டாவில் 41 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சமீபத்தில்தான் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை போட்டிருந்தார். அதன்படி தனக்கு 17 வயதில் ஒரு ஆண் குழந்தையும், மேலும் அழகான இரட்டைக் குழந்தைகளும் இருப்பதாக பதிவிட்டு, ஐ லவ் யூ என்றும் அதில் எழுதியிருந்தார்.

Not son, he is the father of her twin babies woman arrested

ஆனால் அப்பெண் குழந்தை பெறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட டிஎன்ஏவில், அந்த 17 வயது சிறுவன் அப்பெண்ணின் மகன் இல்லையென்றும், சொல்லப்பானால், அந்த இரட்டைக் குழந்தைகளின் அப்பாவே அந்த சிறுவன்தான் என்பதையும் கண்டுபிடித்த சேனல் ஒன்று இதை அம்பலப்படுத்தியது.

அதன் பிறகு சிறுவனை விசாரித்தபோது, தன்னை 15 வயதில் இருந்தே பாலியல் தொல்லை கொடுத்த அந்த பெண்மணி, அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அவரிடம் பணிபுரியும் தனது அண்ணனை வேலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி மிரட்டியதால், அவருடன் இணங்கியதாகவும், ஆனால் தனது 17 வது வயதில் மட்டும் கிட்டத்தட்ட 20 முறை தன்னை பலாத்காரம் செய்துள்ளதாகவும் அதற்காக போதை மருந்துகள் கொடுத்து மயக்கமுறச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.

இந்த நடுங்கவைக்கும் வாக்குமூலத்தை அடுத்து அப்பெண்மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவரது குழந்தைகள் காப்பகத்திலும், அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #SEXUALABUSE #WOMAN #MINORBOY