‘கொதிக்கும் எண்ணெயைக் கொண்டு வந்து’.. ‘குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு’.. ‘ஆண் நண்பரால் நடந்த கொடூரம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 25, 2019 12:11 PM
வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆண் நண்பர் பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 2005ஆம் ஆண்டு திருமணமான அவருக்கு ஆண் குழந்தைகள் பிறக்காததால் அவருடைய கணவர் தனியே பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பீம்ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் பீம்ராவ் குடித்துவிட்டு வந்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்றும் பீம்ராவ் குடித்துவிட்டு வந்ததால் அந்தப் பெண் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பீம்ராவ் நள்ளிரவில் தனது குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பீம்ராவை கைது செய்துள்ளனர்.