‘டாக்டர் அலட்சியம்’.. ‘முகம் இல்லாமல் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Oct 25, 2019 06:46 PM
மருத்துவரின் கவனக்குறைவால் கண், மூக்கு, வாய் இல்லாமல் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகல் நாட்டிலுள்ள செதுபால் (Setubal) என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 7ம் தேதி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைக்கு கண், மூக்கு, வாய் என முகத்தில் உள்ள உறுப்புகள் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் மண்டை ஓட்டின் ஒரு பகுதி சரியாக வளர்ச்சி அடையாமலே இருந்துள்ளது.
தற்போது அக்குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது குழந்தையின் தாய்க்கு மூன்று முறை ஸ்கேன் சோதனை நடத்தியும், மகப்பேறு மருத்துவர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ உறுப்பு வளர்ச்சி இல்லாததை கண்டறியாமல் இருந்துள்ளார். மேலும் கர்ப்ப காலத்தின் 6-வது மாதத்தில் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றொரு முறை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டுள்ளது.
அப்போது குழந்தைக்கு குறைபாடு இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஏற்கனவே 6 புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
