'தடம் புரண்ட பொறியியல் கனவு.. நொடியில் மாறிய வாழ்க்கை'.. ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 31, 2019 06:58 PM

MCR பியூர் காட்டன் க்ளோத் வழங்கும்  ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ நிகழ்ச்சியை பிஹைண்ட்வுட்ஸ் யூ டியூப் சேனலுக்காக இயக்குநர், நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். வாழ்வின் மீதான தன்னம்பிக்கைக்கான வேரினை ஆழமாக ஊன்றுவதையே நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம் சொடக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், புஷ்பா என்கிற விவசாய குடும்பம் பங்கேற்றது. இரண்டு மகன்கள், திருமண வயதான ஒரு மகள் இவர்களுக்கு இருக்கும் நிலையில், வேலாயுதம் மெக்கானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

Engieering boy\'s dreams shattered by pathetic accident

தான் படிக்கவில்லை என்றாலும், மகன்களை படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிய வேலாயுதம், 2வது மகனை பி.ஏ. பொருளாதாரவியல் படிக்க வைத்துள்ளார். பெரிய மகன் விவேக்கினை EEE படிக்க வைத்துள்ளார். ஆனால் படிப்பின் கடைசித் தேர்வினை எழுதச் சென்ற விவேக் சாலையைக் கடக்கும்போது லாரியினைக் கடந்து ஓவர்டேக் செய்ய முயன்ற இன்னோவா காரினால் அடித்துத் தூக்கி வீசப்பட்டார். எனினும் காரை ஓட்டிவந்த டிரைவர் விவேக்கை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே அந்த கார் ஓனர் இன்சூரன்ஸ் தொகையையும் கொடுத்துள்ளார். அங்குதான் விவேக்குக்கு சுயநினைவு முற்றிலும் அற்றுப்போன தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மெல்ல தேறத் தொடங்கிய விவேக்கின் மருத்துவச் செலவுக்காக விவசாயம் செய்யும் வயலை வேலாயுதம் அடமானம் வைத்துள்ளார். ஆனாலும் செலவை ஈடுகட்ட முடியாததால், வீட்டையும் அடமானம் வைத்து பணம் தேற்றி செலவு செய்துள்ளார்.

இறுதியாக விவேக்கின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் மூளையில் அடிபட்டதால் சுயநினைவு எப்படி மாறும் என்று சொல்ல முடியாது என்று கண்ணீர் மல்க பேசுகிறார் வேலாயுதம். அக்குப்பிரஷர் உள்ளிட்ட சிகிச்சைகளை முயற்சி செய்த வேலாயுதம் தன் மகனின் கைகள் கற்கள் மாதிரி ஆகிவிட்டதாகவும் அழும் வேலாயுதம் இன்னொரு மருத்துவரை அணுகியுள்ளார். அவர் சொன்னபடி ஃபோட்டக்ஸ் என்கிற 200 எம்.எல் ஊசியை 40 ஆயிரம் ரூபாய்க்கு பெங்களூரில் இருந்து பெற்று தன் மகனுக்கு போட்டிருக்கிறார். அதன் பின்னரே விவேக்கினால் கை, கால்களை அசைக்க முடிவதாகக் கூறுகிறார். இந்த நிலையில்தான் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று அனைவருக்கும் லஷ்மி ராமகிருஷ்ணன் வலியுறுத்துகிறார்.

‘என் கண்ணுல அழ கூட தண்ணில்லம்மா.. என் பையன்தான் எனக்கு எல்லாமே’என்று கதறும் புஷ்பாவிடம்  ‘ஒரு இரவிருந்தால் ஒரு விடியல் இருக்கும்’ என்று சொல்லி தேற்றி ஆறுதல் கூறிய லஷ்மி ராமகிருஷ்ணன் விவேக்கை சந்தித்து பேசுகிறார். அவர் பேசுவதை விவேக் அழகாகவே புரிந்துகொண்டு சைகையால் பதில் பேசுகிறார். பாசிட்டிவான அந்த அப்பாவின் எண்ணம் மட்டும்தான் விவேக் இந்த நிலைக்காவது வந்திருக்கிறது சாத்தியமாக இருக்கிறது. பொறியியல் படிப்புக்கான கடைசித் தேர்வை எழுத முடியாமல் இருக்கும் விவேக்கிற்கு உதவ நல்ல உள்ளங்களின் உதவியையும் லஷ்மி ராமகிருஷ்ணன் கோருகிறார். கொஞ்சம் திக்கிப் பேசும் வேலாயுதத்தின் மகளுக்கும் தைரியும் சொன்ன லஷ்மி ராமகிருஷ்ணன் தனது தரப்பில் இருந்து விவேக்கின் மருத்துவச் செலவுக்கான காசோலையை அந்த குடும்பத்துக்கு தந்துதவியதைக் கடமையாக நினைப்பதாகவும் கூறி நெகிழ வைத்துள்ளார். உதவ நினைப்பவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இப்படி தன்னம்பிக்கையுடன் போராடுபவர்களுக்குக் கொடுத்துதவ இந்த வீடியோவில் வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Tags : #COLLEGESTUDENT #ENGINEER #LIFE #SAVE #HELP #VIVEK