'சாப்பாட்டில் மயக்கமருந்து'.. திருவிழாவுக்கு போன மாமியாருக்கு மருமகளால் நடந்த கொடுமை..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 24, 2019 09:44 AM

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாமியாரை திட்டமிட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman killed her mother in law near kangayam in Tirupur

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த உத்தண்ட குமாரவலசு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மா. இவரது மகள் பூங்கொடி. இவர் நாகேந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது மூவரும் மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் மற்றும் அவரது மனைவியை கொன்று வீட்டில் புதைத்த வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளனர். இந்நிலையில் தாய் கண்ணமாவும், பூங்கொடியும் சேர்ந்து (புகைப்படத்தில் இருப்பவர்கள்) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு கொலை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பூங்கொடி, நாகேந்திரனை காதல் திருமணம் செய்துகொண்டது நாகேந்திரனின் தாயான ராஜாமணிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மருமகள் பூங்கொடியை, ராஜாமணி கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்ததால் மாமியாரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாவதாக பூங்கொடி தனது தாய் கண்ணமாவிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கணவர் நாகேந்திரன் போதை மறுவாழ்வு சிகிச்சைக்காக பெங்களூரு சென்றுள்ளார். அப்போது தங்கள் ஊரில் திருவிழா எனக் கூறி மாமியார் ராஜாமணியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாமியார் ராஜாமணிக்கு மயக்க மருந்து கொடுத்து, தாய் கண்ணமாவுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும், பின்னர் ராஜாமணியின் சடலத்தை வீட்டு தோட்டத்தில் புதைத்தாகவும் கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கணவரிடம் மாமியாரை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே நாகேந்திரனும் தனது தாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை பைனான்சியர் மற்றும் அவரது மனைவியும் இதேபோல் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாக கண்ணம்மா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராஜாமணியின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #TIRUPUR #WOMAN #KILLED #MOTHERINLAW