‘அம்மா என்னால மூச்சுவிட முடியல’.. ‘உயிருக்குப் போராடிய கடைசி நொடிகளில்’.. ‘பெண் தாய்க்கு அனுப்பிய அதிரவைக்கும் மெசேஜ்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Oct 26, 2019 12:55 PM
பிரிட்டன் கண்டெய்னர் லாரியில் உயிரிழந்த வியட்நாம் பெண் தனது தாய்க்கு கடைசியாக செல்ஃபோனில் மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது.
லண்டன் அருகே வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிந்த பல்கேரியா நாட்டிலிருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த லாரியில் 39 பேரின் சடலங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் உறைந்துபோய் நின்றுள்ளனர். இதுதொடர்பாக லாரியை ஓட்டிவந்த அயர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் 3 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் ஒரு பெண் கண்டெய்னரில் மூச்சுத் திணறி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது இறப்பதற்கு முன்பாக தனது தாய்க்கு செல்ஃபோனில் மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
ட்ரே மை என்ற அந்தப் பெண் தனது தாய்க்கு அனுப்பியுள்ள மேசேஜில், “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. வெளிநாட்டில் குடியேற நான் தேர்ந்தெடுத்த பாதை தோல்வியடைந்து விட்டது. அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் செத்துக்கொண்டிருக்கிறேன். என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் வியட்நாமைச் சேர்ந்தவள். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா” எனக் கூறியுள்ளார். கண்டெய்னர் லாரியில் சடலமாக மீட்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.