'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 29, 2019 04:57 PM
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள பெரியார் நகருக்கு உட்பட்ட நேரு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் எனும் 26 வயது உடற்கல்வி ஆசிரியர் திருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவரின் மனதை மயக்கியுள்ளார். மாணவியும் இவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கியதும், மாணவியை மிரட்டி சினிமா தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற ராஜேஷ் மாணவிக்கு பாலியல் சீண்டல்களைக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இருக்கும்போது, மாணவியை வெளியே அழைத்துள்ளார். ஆனால் மாணவி வரவில்லை. இதனால் மாடி அறையின் சாவியை எடுத்துக்கொண்டு மாடிக்கு வரச் சொல்லி மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மாடிக்கு போன மாணவியை அங்கு எப்படியோ சென்றுவிட்ட ஆசிரியர் மடக்கி பலாத்காரம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். மாணவியும் கஷ்டப்பட்டு கதவைத் திறந்து பெற்றோரிடம் தஞ்சம் அடைந்தார். அப்போது அறைக்குள் ஆசிரியர் ராஜேஷ் அரைகுறை ஆடையுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினரும் மாணவியின் பெற்றோரும் ராஜேஷை சரமாரியாகத் தாக்கி, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள பெரியார் நகருக்கு உட்பட்ட நேரு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் எனும் 26 வயது உடற்கல்வி ஆசிரியர் திருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவரின் மனதை மயக்கியுள்ளார். மாணவியும் இவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கியதும், மாணவியை மிரட்டி சினிமா தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற ராஜேஷ் மாணவிக்கு பாலியல் சீண்டல்களைக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இருக்கும்போது, மாணவியை வெளியே அழைத்துள்ளார். ஆனால் மாணவி வரவில்லை. இதனால் மாடி அறையின் சாவியை எடுத்துக்கொண்டு மாடிக்கு வரச் சொல்லி மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மாடிக்கு போன மாணவியை அங்கு எப்படியோ சென்றுவிட்ட ஆசிரியர் மடக்கி பலாத்காரம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். மாணவியும் கஷ்டப்பட்டு கதவைத் திறந்து பெற்றோரிடம் தஞ்சம் அடைந்தார். அப்போது அறைக்குள் ஆசிரியர் ராஜேஷ் அரைகுறை ஆடையுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினரும் மாணவியின் பெற்றோரும் ராஜேஷை சரமாரியாகத் தாக்கி, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.