‘டெல்லி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்’... ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Oct 29, 2019 04:27 PM

டெல்லியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள், இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது, அங்குள்ள பெண்களிடையே வரவேற்பபை பெற்றுள்ளது.

Delhi women can now travel for free on public run buses

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையின் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்யும் திட்டம், வரும் அக்டோபர் 29-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, துணை முதல்வர் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த திங்கள்கிழமை அன்று இலவச பயணத்தை நினைவுப்படுத்தியிருந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை முதல் பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பிங்க் நிறத்தில் இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டிக்கெட் வாங்கியும் பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து 3-ம் நாளில் வரும் ‘பாய் தூஜ்’ எனும், சகோதரர்கள் மீது சகோதரிகள் பாசம் காட்டும் பெரு விழா, வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். அதை முன்னிட்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பாதுகாப்பாக பயமின்றி பயணம் செய்ய, ஒவ்வொரு பேருந்துக்கும் என்று புதிதாக 13 ஆயிரம் மார்ஷெல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #WOMAN #DELHI #BUS #FREE