‘மது அருந்திக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்’.. ‘ஹோட்டல் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 26, 2019 04:26 PM

சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இளம்பெண் ஒருவரிடம் ஹோட்டல் ஊழியர் தவறாக நடக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Star hotel employee sexually harasses woman guest

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சில தினங்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அறை எடுத்துத் தங்கியுள்ளார். சம்பவத்தன்று ஹோட்டலின் வரவேற்பாளருக்கு ஃபோன் செய்த அந்தப் பெண் அறையைச் சுத்தம் செய்ய ஆள் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய அறைக்கு சுத்தம் செய்ய ஆண் ஊழியர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஊழியர் அறைக்கு வரும்போது மது அருந்திக்கொண்டிருந்த அந்தப் பெண் அவரை ஜன்னல் கதவை மூடும்படி கூறியுள்ளார். அதன்படி ஹோட்டல் ஊழியர் ஜன்னல் கதவை மூடியுள்ளார். பின்னர் அவர் அறைக்கதவையும் மூடிவிட்டு அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் அலறும் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்களும் அங்கு வந்துள்ளனர். ஹோட்டல் ஊழியர்களிடம் நடந்ததை அந்தப் பெண் கூற, இதுகுறித்து உடனடியாக அவர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோட்டல் ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் காவல் நிலையம் வந்த அந்தப் பெண் உயரதிகாரிகளை சந்தித்து ஹோட்டல் ஊழியரை விட்டுவிடும்படி கூறியதால் காவலர்கள் அவரை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #STARHOTEL #STAFF #WOMAN #SEXUAL #HARRASMENT #POLICE #DRUNKEN