"என்னால 'கத்தி கத்தி' சண்டை போட முடியல..." "ஆனால் மனைவியுடன் 'கத்தி சண்டை' போடத் தயார்..." நீதிபதியிடம் அனுமதி கேட்ட 'பரிதாப கணவர்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில், தனது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை தீர்க்க, போர்க்களத்தில் அவருடன் வாள் சண்டையிட அனுமதியுங்கள் என நீதிபதியிடம் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இருதரப்பினரின் பிரச்சினைகளை போர்க்களத்தில் தீர்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும் போர்க்களத்தில் பிரச்சினைகளை தீர்ப்பது அமெரிக்காவில் வெளிப்படையாக தடை செய்யப்படவில்லை. சண்டைக்காக, ஜப்பானில் பயன்படுத்தப்படும் சாமுராய் வாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பெறுவதற்கு 12 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்.
இந்நிலையில், அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் உள்ள பாவ்லோ நகரைச் சேர்ந்த டேவிட் ஆஸ்ட்ராம் என்பவர் தனது முன்னாள் மனைவியுடன் போர்க்களத்தில் வாள் சண்டையிட அனுமதி கோரியுள்ளார். இவருக்கும், அயோவா மாகாணத்தைச் சேர்ந்த இவரது முன்னாள் மனைவி பிரிட்ஜெட் ஆஸ்ட்ராமுக்கும், இடையே சட்டரீதியாக விவாகரத்து ஆகி விட்டது. இருப்பினும் இவர்களிடையே சொத்து வரி செலுத்துதல் போன்ற சில பிரச்சினைகள் இருந்து வருகிறது.
இதற்கிடையே, பிரிட்ஜெட் ஆஸ்ட்ராமும், அவரது வழக்கறிஞரும் தன்னை சட்டரீதியாக மிகவும் நோகடித்துவிட்டதாக டேவிட் ஆஸ்ட்ராம் கடந்த 3ம் தேதி அயோவா மாநிலத்தின் ஷெல்பி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
தனது முன்னாள் மனைவியின் வழக்கறிஞர் உடனான விரக்தியே இந்த முடிவிற்கு காரணம் என அயோவா மாநிலத்தில் இயங்கி வரும் பிரபல பத்திரிக்கையிடம் டேவிட் கூறியுள்ளார்.
