‘அலறல்’ சத்தம் கேட்டு ஓடிவந்த ‘அக்கம்பக்கத்தினர்’... ஒரு வயது ‘பெண்’ குழந்தைக்கு நடந்த ‘கொடூரம்’... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 26, 2019 09:54 AM

பேராசிரியர் ஒருவர் மனைவியையும், ஒரு வயது மகளையும் கிணற்றில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Perambalur Professor Father Faces Enquiry In Girl Baby Murder

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்த தம்பதி சரவணன் - அன்பரசி. கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர். கணவன், மனைவி இருவருமே கல்லூரி ஒன்றில் பேராசியராக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்களுடைய வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது கிணற்றுக்குள் அன்பரசியும், குழந்தையும் விழுந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அன்பரசியை உடனடியாக கயிறு கட்டி மீட்ட அவர்களால் குழந்தையை மீட்க முடியாமல் போயுள்ளது. அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ் விசாரணையில் அன்பரசி, தங்களுக்கு திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் சரவணனுக்கு அதே கல்லூரியில் வேலை செய்யும் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அதற்கு இடையூறாக இருந்ததால் தன்னையும், தன் குழந்தையையும் கொலை செய்யத் திட்டமிட்டு குடிபோதையில் கிணற்றில் தள்ளியதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #HUSBAND #WIFE #BABY #GIRL #PROFESSOR #PERAMBALUR