'இன்னொரு பொன் குழந்த பொறந்துரும்னு'... 'கர்ப்பிணிக்கு கணவன் செய்த கொடூரம்'... 'போலீஸ் அதிர்ச்சி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்ப்பிணி மனைவியை பல கூறுகளாக வெட்டி, உடல் பாகங்களை அரைத்து, அவற்றை எரித்து, சாம்பலைக் குப்பையில் வீசிய சைக்கோ கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

உத்தர பிரதேச மாநிலத்தில், ரேபரலி அருகே வசித்து வரும் தம்பதி, ரவீந்தர குமார் மற்றும் ஊர்மிளா. அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன், அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ரவீந்தர குமார் தனது மனைவியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த கொலையை அவரது மூத்த மகள் நேரில் பார்த்துள்ளார்.
இந்த சம்பவத்தை, அவர் மகள் தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இச்செய்தியைக் கேட்டு அதிர்ந்த போன பெண் வீட்டார், ரவீந்தர குமார் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, ரவீந்தர குமார் கைது செய்யப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட ரவீந்தர குமார், தனக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தாலும், மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த தன் மனைவி மீண்டும் பெண் குழந்தையை பெற்று விடுவாரோ என்ற பயத்திலும், தான் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கொலை குறித்து விவரிக்கையில், ரவீந்தர குமார் தன் மனைவியை, கூர்மையான கத்தியால் பல பாகங்களாக அறுத்து, அவற்றை எரித்து, சாம்பலைப் பல மூட்டைகளில் கட்டி வீசியதாகக் கூறியுள்ளார்.
