‘10 நாள் ஷேவ் பண்ணாம தாடியோட இருக்காரு’.. மனைவி எடுத்த அதிரடி முடிவு.. ஷாக் ஆன கணவர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 11, 2020 03:24 PM

பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாநில மகளிர் ஆணயத்திடம் மனு அளித்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman seeks divorce as husband avoids regular shave and bath

பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவரது மனைவி சோனிதேவி (20). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் சோனிதேவி மாநில பெண்கள் கமிஷனரிடம் தனது கணவரிடமிருந்து விவகாரத்து வேண்டும் என மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், நானும் என் கணவரும் விசாலி மாவட்டத்தில் உள்ள நாயகனோ கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக அவருடைய நடவடிக்கை சரியில்லை. 10 நாட்களுக்கும் மேலாக அவர் முகசவரம் செய்யாமல் தாடியுடன் இருக்கிறார். தினமும் பல் துலக்குவது இல்லை, குளிப்பது இல்லை. இதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த மாநில மகளிர் கமிஷன் உறுப்பினர், விவாகரத்து வேண்டும் என சோனிதேவி சொல்லும் காரணம் சாதாரணமாக உள்ளது. அவருக்கு அறிவுரை கூறி இருக்கிறோம். 2 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். மாற்றம் ஏற்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம் என அவர் தெரிவித்துள்ளர். மேலும் மனைவியின் இந்த முடிவால் மனீஷ்ராம் சற்று கலக்கம் அடைந்துள்ளார்.

Tags : #WOMAN #HUSBAND #DIVORCE