கணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 09, 2020 09:06 AM

செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Chennai Woman Dies In Front Of Husband In Bike Lorry Accident

பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ராமரெட்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி யுவராஜ் (28) - ஜெயலட்சுமி (24). இவர்கள் இருவரும் நேற்று இரவு செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை அருகே போய்க்கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி கணவர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் யுவராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #WOMAN #HUSBAND #CHENNAI