‘முதலிரவு’ முடிந்ததும் சத்தியத்தை உடைத்த கணவன்.. ‘மனைவி’ எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 04, 2020 07:02 PM

தனது கோரிக்கையை முதலிரவு முடிந்த பின்னர் கணவர் நிராகரித்தால் மனைவி தனது பிறந்த வீட்டுக்கே திருப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband breaks promise after first night bride return to home

ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி அருகே உள்ள மாலிக்பூர் காதர் என்ற பகுதியை சேர்ந்தவர் குல்ஃபாம். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் முதலிரவு முடிந்த அடுத்த நாளே மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

திருமணம் முடிந்த முதலிரவு அன்று புதுப்பெண் தனது கணவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார். குறிப்பாக குல்ஃபாமின் தாடி, மீசை, பைஜாமா உடை ஆகியவை தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் புகுந்த வீடு நவீன வசதிகள் கொண்டதாக இல்லை எனக் கூறி, தனது கனவுக்கு ஏற்ப கணவர் மாறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இவை அனைத்தையும் குல்ஃபாமின் பொறுமையாக கேட்டுவிட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துள்ளார். ஆனால் முதலிரவு முடிந்த பின்னர், தன்னுடைய விருப்பப்படியே இருப்பேன், எதையும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என மனைவியிடம் கூறிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். காலை விடிந்ததும் எழுந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. மனைவி வீட்டில் இல்லை. விசாரித்ததில் மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கு சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து குல்ஃபாமின் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Tags : #HUSBAND #BRIDE #PROMISE #FIRSTNIGHT