‘கிறிஸ்துமஸ்’ விடுமுறை முடிந்து... அலுவலகத்தை திறந்தபோது ‘காத்திருந்த’ அதிர்ச்சி... ‘உறைந்துபோய்’ நின்ற ‘சென்னை’ ஊழியர்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 27, 2019 09:48 AM

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அலுவலக அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Man Commits Suicide In Private Office Over Family Issue

சென்னை பெரம்பூர் நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்துவந்துள்ளார். இவருடைய மனைவி ரேகா சினிமா மற்றும் சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருபவர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று காலை விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகத்தை திறந்தபோது, அலுவலக அறை ஒன்றில் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். 

அதைப் பார்த்து உறைந்துபோய் நின்ற ஊழியர்கள் உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் கோபிநாத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கோபிநாத் கடந்த 6 மாதங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் கோபிநாத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்ததாகவும், அத்துடன் அவருக்கு கடன்பிரச்சனை இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்த கோபிநாத்திற்கும், மனைவி ரேகாவிற்கும் இடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அலுவலகத்திற்குச் சென்ற கோபிநாத் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியால் கதவைத் திறந்து உள்ளே சென்று, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ‘நீ அந்த ஃபோட்டோஸ்லாம் அனுப்பு.. பாலிவுட் நடிகை மாதிரி இருப்ப!'.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

இதையும் படிங்க‘கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’!.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Tags : #CHENNAI #SUICIDE #HUSBAND #WIFE #OFFICE #CHRISTMAS