‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா?... திருமணமாகி ‘2 வாரங்கள்’ கழித்து... மனைவி ‘ஆண்’ என அறிந்து... ‘அதிர்ந்து’ நின்ற ‘புதுமாப்பிள்ளை’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 15, 2020 08:07 PM

உகாண்டாவில் திருமணமாகி 2 வாரங்கள் கழித்து தனது மனைவி ஒரு ஆண் என்பதை அறிந்து புதுமாப்பிள்ளை ஒருவர் அதிர்ந்து போய் நின்றுள்ளார்.

Ugandan Imam Discovers His Wife Is Man 2 Weeks After Marriage

உகாண்டாவைச் சேர்ந்த இமாம் ஆன முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முகமதுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டிலிருந்து துணிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை  புதுப்பெண் சுவபுல்லா  திருடியதாக புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து சுவபுல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் அவரை சோதனை செய்ததில் சுவபுல்லா பெண்ணே இல்லை என்பதும் அவர் ஒரு ஆண் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய உண்மையான பெயர் ரிச்சர்ட் (27) என்பதும் உறுதியாகியுள்ளது.

இது குறித்து போலீசார் புதுமாப்பிள்ளை முகமதுவிற்கு தகவல் கொடுக்க அவர் அதிர்ந்து போய் நின்றுள்ளார். திருமணமான நாள் முதல் தூங்கும்போது கூட உடலை முழுவதுமாக மறைக்கும்படியே உடை அணிந்து சுவபுல்லா தூங்கியதாக முகமது தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், முகமதுவுடைய வீட்டில் திருடுவதற்காகவே ரிச்சர்ட் பெண் வேடமிட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MONEY #UAGANDAN #MARRIAGE #WIFE #MAN #IMAM