"போகாதீங்க ப்ளீஸ்!"... "போக வேண்டியது என் கடமை!!"... "பைலட்டின் கடைசி நிமிடங்கள்"... "என்ன நடந்தது?"...
முகப்பு > செய்திகள் > கதைகள்By Manishankar | Jan 12, 2020 04:32 PM
ஈரான் நாட்டில் விபத்துக்குள்ளான விமான ஓட்டியின் மனைவி, தனது கணவரின் தன்னம்பிக்கைப் பற்றி கூறிய செய்தி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், உக்ரைன் நாட்டு விமானம் ஒன்று ஈரானில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய பைலட்டின் மனைவி தன் கணவருடன் இறுதியாகப் பேசியவற்றை ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளாதால், அந்த விமானத்தில் செல்ல வேண்டாம் எனத் தாம் அறிவுறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசுகையில், "என்னால் பின்வாங்க முடியாது. என்னால் இதைச் செய்யமுடியவில்லை என்றால் வேறு யாராலும் முடியாது. நான் தான் விமானத்தை இயக்க வேண்டும். நான் பறந்தாக வேண்டும்" என்று அவரது கணவர் தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தன்னம்பிக்கையும், கடமை உணர்ச்சியும் அனைவரின் மனதையும் கலங்கடித்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.