‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 08, 2020 02:26 PM

மதுரையில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சிலர் இளம்பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai Woman Brutally Murdered By 2 Men In Her House

மதுரை தல்லாகுளம் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதி குமரகுரு - லாவண்யா. இவர்கள் குமரகுருவின் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 2 மர்ம நபர்கள் குமரகுருவின் வீட்டிற்குள் நுழைந்து லாவண்யாவை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அப்போது அதைப் பார்த்து சத்தம்போட்ட லாவண்யாவின் மாமியார் சீனியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சீனியம்மாள் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணைக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MADURAI #CRIME #MURDER #WOMAN #HOUSE #MOTHER #HUSBAND