‘ஏற்கெனவே’ 2 குழந்தைகள்.. 13 ஆண்டுகளுக்கு முன் இறந்த ‘கணவர்’... ‘பச்சிளம்’ குழந்தைக்கு ‘தாயால்’ நடந்த பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 23, 2019 11:01 PM

சிவகங்கை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Sivagangai New Born Baby Saved After Abandoned By Mother

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த அரியக்குடி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் அருகே முட்புதருக்குள் குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த மருத்துவமனையின் மற்றொரு வார்டில் சிகிச்சைக்காக வந்த சரஸ்வதி என்ற பெண், “எனக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. உறவினர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். எனக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் முன்னதாக மருத்துவமனைக்கு வந்தேன்” எனக் கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார். அப்போது செவிலியர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாகவே பதிலளித்த சரஸ்வதியைப் பிடித்து தீவிரமாக விசாரித்ததில், முட்புதரில் கிடந்த குழந்தை அவருடையதுதான் எனத் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மருத்துவனை தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அங்கு வந்த அவர்கள் சரஸ்வதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவருக்கு திருமணமாகி ஏற்கெனவே 2 குழந்தைகள் இருப்பதும், அவருடைய கணவர் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர் இந்தக் குழந்தை பெற்றதாலேயே முட்புதரில் வீசியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #SIVAGANGAI #KARAIKUDI #MOTHER #BABY #HUSBAND #AFFAIR