எங்களுக்கு நாய்க்குட்டியே போதும்... கதிகலங்கும் கணவன்மார்கள்...! ஆப்பு வைக்கு ஆய்வு முடிவு...!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Suriyaraj | Jan 09, 2020 03:34 PM

பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதையே அதிகம் விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Women prefer sleeping with pets - Recent study

என்னதான் ரொமாண்டிக்கான கணவனாக இருந்தாலும் தூங்கும் போது பெண்களை  தொந்தரவு செய்தால் அவர்களுக்கு பிடிக்கவே  பிடிக்காது. அதனால்தான் பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதையே அதிகம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அப்போதுதான் அவர்கள் அதிக நிம்மதியாக இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கவில் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான கிறிஸ்டி எல். ஹாஃப்மேன், கெய்லீ ஸ்டட்ஸ் மற்றும் டெர்ரி ஆகியோர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆடி, ஓடி, களைத்து இரவில் நிம்மதியாக தூங்கும் போது தங்கள் வாழ்க்கைத்துணையின் அணைப்பில் தூங்குவதைவிட  தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அணைத்தபடி உறங்கவே அதிகம் விரும்புவதாக அதிக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகளைப் போல் நம் மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியவை வேறெதுவுமில்லை என்பது அப்பெண்களின் கருத்தாக உள்ளது. செல்லப்பிராணிகளுடன் உறங்கும்போது அவர்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தும் கனவுகள் ஏற்படுவது குறைவதாகவும் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் இன்றைய இல்லற வாழ்வில் ஆண்-பெண் உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருப்பதையே காட்டுவதாக ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : #WOMEN #SLEEPING WITH PETS #RECENT STUDY #HUSBAND #WIFE #DOG